| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180727b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a நடராஜர் |
| 300 | : | _ _ |a சைவம் |b உயரம் 115 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a நடராஜர் ஆனந்தத் தாண்டவ ஆடல் கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். முன் வலது கை காக்கும் கரமாக விளங்க, பின்னிரு கைகளில் தமருகமும், தீயகலும் திகழ்கின்றன. செவிகளில் குண்டலங்களை அணிந்துள்ளார். கொக்கிறகு சூடிய தலைக் கோலத்தின் நடுவே கங்கையும் மதியும் விளங்குகின்றன. அரையாடை அணிந்துள்ள ஆடல்வல்லானின் உதரபந்தமாக நாகம் காட்டப்பட்டுள்ளது. குனித்த புருவமும் கோவை செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த தலையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் விளங்க, ஊன்றிய பாதம் அபஸ்மாரன் மேல் நிற்கவும், குஞ்சித பாதம் குழுமும் அடியார் வணங்கவும், ஐந்தொழில்களின் ஐயன் ஆடுகிறார் ஆலங்காட்டிலே. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a ஆடல்வல்லானின் செப்புத் திருமேனி சோழர் காலத்து படிமக்கலையாகும். உலகப்புகழ் பெற்ற ஆடல்வல்லானின் இத்திருமேனி அதன் வடிவமைப்புக்கு ஏதும் இணையற்றது. நடராசரின் ஆடற் திருக்கோலத்தில் காட்டப்பட்டுள்ள ஆடையணிகளும், தலைக்கோலமும் எழிற்வாய்ந்தவை. ஐம்பூத தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆடல்வல்லானின் திருவுரு இறைவனின் ஐந்தொழிலைக் குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், நடராஜர், சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |b செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |c திருவாலங்காடு |d திருவள்ளூர் |f திருத்தணி |
| 905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001228 |
| barcode | : | TVA_SCL_0001228 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |